லக்னோ:

த்தரப்பிரதேசத்தில் உட்கல் பயணிகள் ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேரின் சடல்ங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

ஒரிசா மாநிலம் பூரியில் இருந்து உத்திரகாண்ட் மாநிலம் ஹரித்துவார் செல்லும் ரயிலான உட்கல் எக்ஸ்பிரஸ் இன்று மாலை 6.32 மணி  அளவில் உத்திர பிரதேச மாநிலம் முசாபராபாத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானது.

பூரியிலிருந்து ஹரித்துவார் வரை செல்லும் கலிங்கா உட்கல் ரயில் முசாபர் நகர் அருகே தடம் புரைண்டு விபத்துக்குள்ளானது. இதில் 6 பெட்டிகள் கவிழ்ந்தன.

தடம்புரண்டதால் சேதமான பெட்டிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.  விபத்தில் சிக்கி யுள்ள பயணிகளை மீட்க மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். இதுவரை 6 பேரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதுவரை 44 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

 

டில்லியில் இருந்து சரியாக 100 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த விபத்து நடந்த பகுதி அமைந்துள்ளது.