சென்னை,
சசிகலா காலில் திண்டுக்கல் சீனிவாசன் விழுந்த புகைப்படத்தை வெளியிட்டால் அவருக்கு அசிங்கமாகும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார் டிடிவி தினகரன்.
ஆட்சியாளர்கள் ஜெயலலிதா வழியில் செல்லவில்லை என்றால், அவர்களுக்கு ஆபத்து நிச்சயம் என்று எச்சரிக்கை விடுத்தார். கட்சி இருந்தால்தான் ஆட்சி இருக்கும்.
ஆட்சியில் இருப்பவர்கள் கையில் கண்ணாடி பாத்திரத்தை வைத்திருப்பது போல என்றும், எகட்சிக்கு விரோதமாக நடந்து கொள்வோர் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். அரசு விழாக்களில் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் இருப்பதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.
யார் திருடன் என்பது அதிமுக தொண்டர்களுக்கு நன்றாக தெரியும். ஏப்ரல் 10 ஆம் தேதி வரை என்னுடன் இருந்த அமைச்சர்கள், பின்னர் சசிகலாவின் பேனர்களை அகற்றியது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
கடந்த 10 ஆண்டுகளாக எங்கு இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். சசிகலாவின் காலில் விழுந்தவர் திண்டுக்கல் சீனிவாசன். அந்த போட்டோ கூட என்னிடம் உள்ளது. அதை வெளியிட்டால் அவருக்கு நல்லதல்ல என்றும் எச்சரிக்கை விடுத்தார்.
கடந்த 10 வருடங்களாக சீனிவாசன் எங்கு இருந்தார் என யாருக்கும் தெரியும். நாங்கள் கொடுத்த பதவியை வைத்து கொண்டு பேசி வருகிறார். அவர் பதவி விலகிவிட்டு பேச வேண்டும்.
ஆத்தூர் தொகுதியில் நிற்க பயந்தவர் சீனிவாசன். பொருளாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டதும் என் காலில் விழ வந்தார். விழ வேண்டாம் என கூறினேன். அவருக்கு பதில் சொல்ல விரும்ப வில்லை. அவருக்கு தேவையில்லை என்றால் பதவி விலகலாம்.
நாங்கள் வேறு யாரையாவது நியமித்து கொள்கிறோம். சீனிவாசன் பேசியது குறித்து அவரது மனசாட்சிக்கே தெரியும். கட்சியை யாரும் கைப்பற்றிவிட முடியாது.
ஆர்கே நகர் நான் நின்ற போது அவர்கள் அமைச்சர்கள் பிரசாரம் செய்தனர். ஜெயக்குமார் எனக்காக பிரசாரம் செய்தார். அவர் வராத நாளில் அவரது மகன் பிரசாரத்திற்கு வந்தனர். ஓபிஎஸ் காலில் விழுந்தாவது அணிகளை இணக்க வேண்டும் என எண்ணுகின்றனர்.
ஆனால், இவர்கள் ஒன்று சேர்ந்தாலும், தொண்டர்களின் எண்ணம் தான் எங்களின் வேதவாக்கு. எங்களின் முதல் கடமை கட்சியை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.