டில்லி:

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினராக நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மத்திய திரைப்பட தணிக்கை வாரிய நிர்வாக அமைப்பை மத்திய அரசு மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளது. வாரிய தலைவராக பிரகன் ஜோஷி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.தற்போது தணிக்கை வாரிய தலைவராக இருந்த பஹ்லாஜ் நிஹ்லானி அதிரடியாக நீக்கப்பட்டார்

புதிய உறுப்பினர்களாக நடிகை கவுதமி, நரேந்திர கோஹ்லி, நரேஷ் சந்திர லால், நெயில் ஹெர்பர்ட் நாங்கிநிர், விவேக் அக்னிகோத்ரி.

வாமன் கென்ட்ரே, வித்யா பாலன், நாகாபர்னா, ரமேஷ் பதாங்கே. வானி திரிபாதி திக்கு, ஜீவிதா ராஜசேகர், மிகுர் புத்தா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்து வரும் 3 ஆண்டுகளுக்கு இந்த பதவியில் நீடிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.