சென்னை:
ரஜினிகாந்த் – எமி ஜாக்சன் நடித்து வரும் எந்திரன் 2 திரைப்படம் ஆந்திரா, தெலங்கான மாநிலத்தில் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் வெளியான எந்திரன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவரும் படம் எந்திரன்-2.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் தீபாவளிக்கு வெளிவர இருக்கும் நிலையில், இந்த படத்தின் விற்பனை எதிர்பாராத அளவுக்கு பெரும் தொகைக்கு விற்பனையாகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஏ சுபாஷ்கரனின் லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்த படம், இதுவரை தயாரிக்கப்படாத அளவுக்கு அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையில், ரஜினிகாந்த், எமி ஜாக்சன், அக்ஷ்ய் குமார் உள்ளிட்ட பலர் நடிக்கும் எந்திரன் இரண்டாம் பாகமான 2.0, கடந்த வருடம் படப்பிடிப்பு துவங்கி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதன் படப்பிடிப்பு மற்றும் டப்பிங் நிறைவடைந்ததை அடுத்து, தற்போது இப்படத்தின் இறுதி பணிகளான பின்னணி இசை மற்றும் விஷுவல் எபக்ட்ஸ் (VFX) ஆகியவை மும்மரமாக நடைபெற்று வருகிறது
தீபாவளிக்கு திரைக்கு வரவிருக்கும் 2.0 படத்தை, பாகுபலி-2 படத்தைப் போலவே 3டி தொழில் நுட்பத்திலும் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர்.
அதோடு, ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியிடவும் உள்ளனர்.