பெய்ஜிங்:
சீனாவில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சிச்சுவான் என்ற மலை பிரதேச மாகாணத்தில் லியாங்ஷான் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 23 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த நிலச் சரிவினால் அந்த பகுதியில் 71 வீடுகள் இடிந்துள்ளது. 2 பேர் மாயமாகியுள்ளனர். நிலச்சரிவில் இருந்து ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் சிச்சுவான் மாகாணத்தின் மற்றொரு பகுதியில் ஏற்பட்ட நில சரிவில் 10 பேர் இறந்தனர். இதில் மாயமான 70 பேரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
Patrikai.com official YouTube Channel