
சென்னை:
வறட்சியால் உயிரிழந்த 125 விவசாயிகளின் குடும்பங்களுக்கு நடிகர் தனுஷ் தலா 50 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 62.5 லட்ச ரூபாய் உதவித் தொகையாக அளித்துள்ளார்.
தனுஷ் தேனி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சங்கராபுரத்திற்கு சென்றார். அங்கு குல தெய்வ கோயில் வழிபாட்டில் கலந்து கொண்டார்.
அதன்பின் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்த அவர், ரூ.62.5 லட்சத்துக்கான காசோலைகளை அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தனுஷ், “விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு. விவசாயிகளைக் காப்பதற்கு என்னால் இயன்ற உதவியை செய்திருக்கிறேன்.
தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் விவசாய பணிகள் தொடர்பாக கணக்கெடுப்பு மேற்கொண்டு, விவசாயிகளுக்கு உதவ திட்டமிட்டிருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel