
சென்னை,
ஏரியை பார்வையிட மு.க. ஸ்டாலினை தடுப்பது ஏன்? அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி விடுத்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் உள்ள கச்சிராபாளையத்தில் உள்ள ஏரியை திமுகவினர் தூர்வாரினர். இந்த ஏரியை பார்க்கச் சென்ற ஸ்டாலினை காவல்துறை தடுத்தது.
காவல்துறையின் இந்த நடவடிக்கையை எதிர்த்து திமுக சட்டத்துறை செயலாளர் கிரிராஜன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும் ஏரிகளைத் தூர்வாரும் பணியில் ஈடுபடும் திமுகவினரை அரசு தடுக்கக் கூடாது என்று தனது மனுவில் தெரிவித்திருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பினார். இன்று பிற்பகலில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
Patrikai.com official YouTube Channel