ஜெத்தா

பெர்மிட் இல்லாததால் ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சவுதி போலீசாரால் கைது செய்யப்பட்டு மூன்று மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.

கடந்த ஜூன் 26ஆம் தேதி நிகழ்ந்த இது, இப்போதுதான் வெளியே தெரிய வந்துள்ளது.

மும்பையில் இருந்து ஜெத்தா செல்லும் ஏர் இந்தியாவின் விமான ஊழியர்கள் உணவருந்தி விட்டு தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பிக்கொண்டிருந்தனர்.  அப்போது இவர்கள் வந்த வாகனத்தை சவுதி போலீசார் செக்கிங்குக்காக நிறுத்தியுள்ளனர்.  இது அங்கு வழக்கமாக நடப்பதுதான்.

அவர்களிடம் பெர்மிட் பேப்பர்,  மற்றும் ஏர் இந்தியாவின் அடையாள அட்டைகள் இல்லாததால் அவர்கள் போலீஸ் வேனில் ஏற்றப்பட்டனர்.  மொபைல் ஃபோன் உபயோகப் படுத்தக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டது.  ஆனாலும் போலிசுக்கு தெரியாமல் ஒரு ஊழியர் தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஃபோன் செய்து தாங்கள் தற்போது இருக்குமிடத்தை தெரிவித்துள்ளார்.  ஓட்டலின் இரு ஊழியர்கள் அந்த இடத்துக்கு விரைந்துள்ளனர்.  அவர்கள் இமிக்ரேஷன் டாகுமெண்டை காட்டிய போதிலும் ஊழியர்கள் அனைவரையும் கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்ப்பட்டனர்

அங்கு அவர்களிடமிருந்த மொபைல்கள் கைப்பற்றப் பட்டு அனைவரும் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டனர்.  மூன்று மணி நேரம் கழித்து அவர்கள் தங்கியிருந்த ஓட்டலின் முதலாளியான அராபியர் வந்து அவர்களை அடையாளம் தெரிவித்த பின் விடுவிக்கப்பட்டனர்.

இமிக்ரேஷன் டாக்குமெண்ட் தற்போது சவுதியில் செல்லுபடி ஆகாது எனவும், சவுதியில் தங்கியவர்களுக்கு கொடுத்த பொது மன்னிப்பு காலம் முடிந்து விட்டபடியால் தற்போது அரசு மிகவும் கடுமையாக உள்ளது என பின்னர் நிலைய அதிகாரி மூலம் ஏர் இந்தியா பணியாளர்கள் தெரிந்துக் கொண்டனர்.