சென்னை,
அதிமுகவில் பல்வேறு கோஷ்டிகள் உள்ள நிலையில், அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளராக சசிகலாவால் நியமிக்கப்பட்ட டிடிவி தினகரன், அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துளாளர்.
வரும் 5ந்தேதி (ஆகஸ்டு) சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வருமாறு டிடிவி தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வரும் 5ந்தேதி (அடுத்த சனிக்கிழமை) காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்துக்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதன் காரணமாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, துக்க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சசிகலா உறவினர்களான வெங்கடேஷ், திவாகரன் மற்றும் தினகரன் ஒன்றுகூடி பேசிய நிலையில், தற்போது டிடிவி தினகரன், அதிமுக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்திருப்பது எடப்பாடி தலைமையிலான அரசுக்கும், அமைச்சர்களுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதன் காரணமாக தலைமை கழகத்தையும், கட்சியையும் கைப்பற்ற டிடிவி தினகரன் முயற்சிப்பதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.