திருவனந்தபுரம்:

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து பா.ஜ. சார்பில் நடக்கும் போராட்டம் காரணமாக பஸ் மற்றும் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள விநாயக் நகரில் ராஜேஷ் என்ற ஆர்எஸ்எஸ் பிரமுகரை படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து பா.ஜ. சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இதனால் மாநிலத்தின் பல பகுதிகளில் பா.ஜ., தொண்டர்கள் பேரணி சென்றனர். இதனால், மாநிலத்தில் ரெயில் மற்றும் பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு பஸ்கள் இயங்கவில்லை.

கொச்சியில் பெட்ரோல் நிலையங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டன. பாலக்காடு மற்றும் கோட்டயத்தில் வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. அரசு பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது. கோட்டயத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். கொப்பம் என்ற இடத்தில் சி.ஐ.டி.யூ., அலுவலகம் மீது கல்வீசப்பட்டது.

ராஜேஷ் கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களில் கொலை வழக்கில் 5 பேருக்கு நேரடி தொடர்பும், மற்ற 5 பேர் அவர்களுக்கு உதவியுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர்.