பெங்களூரு:

குஜராத் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி ரூபாய் கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக விலைபேசியுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.

அடுத்த மாதம் 8ம் தேதி குஜராத் மாநிலத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குஜராத் மாநிலத்தில் இருந்து பாஜகவைச் சேர்ந்த ஸ்மிருதி இரானி, அமித்ஷா உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பில் அகமது படேல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேரின் வாக்குகள் தேவை. இந்த நிலையில் இவர்களை அனைவரையும் தங்கள் பக்கம் இழுக்கும் வேலையில் பாஜக இறங்கியது. ஏற்கனவே ஒரே நாளில் பாஜக தங்கள் பக்கம் 3 எம்எல்ஏ.க்களை இழுத்துக் கொண்டது.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 44 பேர் அவசர அவசரமாக குஜராத் மாநிலத்தில் இருந்து பெங்களூருவிற்கு இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்டு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ ஒவ்வொருவருக்கும் ரூ.15 கோடி கொடுத்து தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயற்சி செய்தது என்று பெங்களூருவில் தங்கியுள்ள எம்எல்ஏ.,க்கள் பகீர் தகவலை வெளியிட்டுள்ளனர். இந்தத் தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.