டில்லி:
கேஏஎல் ஏர்வேஸ் மற்றும் ஸ்பைஸ் ஜெட் இடையிலான பங்கு மாற்றம் தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ரூ. 250 கோடியை ரொக்கமாகவும், ரூ. 329 கோடியை வங்கி உத்தரவாதம் மூலம் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யபப்ட்டது. மனுவை விசாரிதத் நீதிபதிகள் விமான நிறுவனத்தில் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர். ரூ. 579 கோடியை உயர்நீதிமன்றத்தில் டொபசிட் செய்ய உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவு ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கும், அஜய் சிங்கிற்கும் பின்னடைவாக அமைந்துள்ளது. அஜய் சிங் தான் தற்போது ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு பங்குதாரராக இருக்கிறார்.
கடந்த 2015ம் ஆண்டு பிப்ரவரியில் கேஏஎல் மற்றும் கலாநிதிமாறன் ஆகியோர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தில் 58.4 சதவீத பங்குகளை அஜய்சிங்கிற்கு மாற்றி கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.