திருமலை,

ந்திர கிரகணத்தையொட்டி அடுத்த மாதம் (ஆகஸ்டு) 7 மற்றும் 8ந்தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படும் நேரம் விவரங்களை  திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சூரியன் -பூமி -சந்திரன் அனைத்தும் ஒரே நேர் கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் ஏற்படும். இந்த ஆண்டு வரும் ஆகஸ்டு 7ந்தேதி இரவு  மீண்டும் சந்திர கிரகணம் வர இருக்கிறது.

பொதுவாக சந்திர கிரகணத்தின்போது இந்துக்கோவில்களின் கருவறை மூடப்படுவது வழக்கம். கிரகணம் முடிந்த பின்னர் கோவில்களைக் கழுவி சுத்தம் செய்வார்கள்.

அதுபோல, வரும் ஆகஸ்டு 7ந்தேதி  இரவு சந்திர கிரகணம் வருவதால்,  கோவில் மூடப்பட்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் கூறிப்பிட்டுள்ளது.

ஆகஸ்ட் 7 ஆம் தேதி இரவு சந்திரகிரகணம் ஏற்படவுள்ளதால், அன்று மாலை  நான்கரை மணியிலிருந்து அடுத்த நாள் (8ந்தேதி) அதிகாலை 2 மணி வரை மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாலை 2 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டு கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு வழக்கமான வழிபாடுகள் நடைபெறும்.

சந்திரகிரகணத்தையொட்டி,  7ம் தேதி நடெபற இருநத கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்கர தீப அலங்கார சேவை உள்ளிட்ட சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம்  அறிவித்து உள்ளது.

[youtube-feed feed=1]