ராமேஸ்வரம்:
இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் மணி மண்டபத்தைத்தை ராமஸ்வரத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைக்கிறார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விஞ்ஞானியாகவும் இஸ்ரோவில் பணிபுரிந்தவர். இந்திய ராக்கெட் திட்டங்கள் பலவற்ரில் அவரது பங்கு உண்டு. “இந்தியா வல்லரசாக வேண்டும்” என்றும் “கனவு காணுங்கள் இளைஞர்களே” என்றும் மக்களை உற்சாகப்டுத்தியவர்.
அவர் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி காலமானார்.
அவரது நினைவைப் போற்றும் விதமாக ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது சொந்த ஊரான பேய்க்கரும்பு என்னும் இடத்தில் 15 கோடி ரூபாய் செலவில் மணி மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. கலாமின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளைான இன்று அந்த மண்டபத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க இருக்கிறார்
சுமார் 11.30 மணியளவில் கலாம் மணி மண்டபத்திற்கு வரும் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைக்கிறார். பிறகு மணி மண்டபத்தை திறந்து வைக்கிறார்.
அதன் பிறகு ‘அப்துல்கலாம்-2020’ என்ற பிரசார வாகனத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படையின் மற்றொரு நிகழ்வில் பங்கேற்கும் மோடி, ராமேஸ்வரம் – அயோத்தி இடையே புதிய ரயில் சேவையையும், ஆழ்கடல் மீன்பிடிப்பு திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கிறார்.