சென்னை,

நாடு முழுவதும் புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு பண மதிப்பிழப்புக்கு பிறகு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் தடை செய்யப்பட்டு, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு வெளியிட்டது.

இந்நிலையில், புதிய 200 ரூபாய் நோட்டுக்களை அடுத்த மாதம் வெளியிட ரிசர்வ் வங்கிதிட்டமிட்டுள்ளது.

இதற்காக புதிய நோட்டுக்களை அச்சடிக்க ரிசர்வ் வங்கி ஏற்கனவே உத்தரவு (ப்ரிண்டிங்) பிறப்பிக்கப்பட்டது. தற்போது  புதிய ரூ.200 நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறைவடைந்து விட்டதாகவும், அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய அரசின் முதலீடு மற்றும் கரன்சி துறையின் மூத்த அதிகாரி கூறும்போது, முதல்கட்டமாக நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி ஜூன் மாதம் தொடங்கி 21 நாட்களில் முடிவடைந்தது. இதனால் அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறினார்.

மேலும் ரூ.500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சடிக்கும் பணி நடந்து வருகிறது. ரூ.200 நோட்டு வெளியீட்டிற்கு பிறகு ரூபாய் நோட்டு தட்டுப்பாடு குறையும் எனவும் எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

அடுத்த மாதம் ரூ.200 நோட்டுக்களை அறிமுகம் செய்வதற்காக ஒரு பில்லியன் ரூ.200 நோட்டுக்கள் அச்சிடப்பட்டு வருகிறது.

ரூ.2000 நோட்டுக்களின் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக ரூ.500 நோட்டுக்கள் அதிகம் அச்சிடப்பட்டு வருகின்றன. கடந்த 40 நாட்களாக ரூ.500 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி அதிகம் புழக்கத்தில் விட்டு வருவதாக எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 2000 ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.