பெங்களூரு:

பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுவது குறித்து அறிக்கை அளித்த விவகராத்தில் தான் உறுதியாக இருப்பதாகவும், எந்த விதத்தில் எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்ள தயார் என்றும் கர்நாடக மாநில சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, தெரிவித்துள்ளார்.

கர்நாடக சிறைத்துறை டி.ஐ.ஜி. ரூபா, சமீபத்தில் பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு அறிக்கை அனுப்பினார்.

அதில், “இச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அவருக்கு சமையலறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெண் கைதிகள் சிலர் சசிகலாவுக்கு சமையல் செய்து தருகிறார்கள். இந்த வசதிகளுக்காக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணாவுக்கு இரண்டு கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்” என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிக்கையை கர்நாடக காவல்துறை உயரதிகாரிகளுக்கு அனுப்பிய ரூபா, சத்யநாராயணாவுக்கும் அனுப்பினார். இந்த அறிக்கை ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபர்பபை ஏற்படுத்தின. இது குறித்து ஆராய கமிட்டி அமைக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணா, “அச் சிறைச்சாலையில் முறைகேடுகள் நடப்பதாக ஏதும் தகவல் வரவில்லை. இது குறித்து விபரம் தெரிவிக்குமாறு ரூபாவுக்கு மெமோ அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரூபா இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு வசதிகள் அளித்திருப்பது உண்மைதான். இதை அரசுக்கு அளித்த அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அந்த அறிக்கை ஊடகங்களில் வெளியானது குறித்து எனக்கு ஏதும் தெரியாது. இது குறித்து நான் ஊடகங்களில் பேசவில்லை.

ஆனால் சத்தியநாராயணாவும் பிற அதிகாரிகளும் தான் ஊடகங்களிடம் பேசி வருகிறார்கள். சசிகலா பற்றி அறிக்கை அனுப்பியதன் பின்னணியில் எனக்கு எந்த தனிப்பட்ட நோக்கமும் கிடையாது. ஆனால் இந்த விவகாரத்தில் என்னை குறிவைத்து சிலர் தாக்குகிறார்கள்.

இதற்காக நான் கவலைப்படவில்லை. எனது அறிக்கையில் உறுதியாக இருக்கிறேன். இதுகுறித்த எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்” என்று ரூபா தெரிவித்துள்ளார். யில் தனியாக சமையல் அறை அமைத்து உணவு தயாரித்துக் கொள்ள அ.தி.மு.க அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா சார்பில் சிறைத்துறையின் உயர் அதிகாரிகளுக்கு இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக கர்நாடக டி.ஐ.ஜி ரூபா புகார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறைத்துறை டி.ஐ.ஜி ரூபா கர்நாடக மாநில காவல்துறை இயக்குனர் ஆர்.கே.தத்தாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் அறையில் தனியாக சமையல் கூடம் அமைத்துக் கொள்ள விதிகளை மீறி அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பெண் கைதி ஒருவரை சசிகலா, சமையல் கலைஞராக பயன்படுத்திக் கொள்ளவும் சிறை அதிகாரிகள் அனுமதித்துள்ளதாக ரூபா தெரிவித்துள்ளார். இதற்காக சிறைத்துறை இயக்குனராக இருக்க கூடிய சத்தியநாராயண ராவ் மற்றும் சில அதிகாரிகள் சசிகலாவிடம் இருந்து 2 கோடி ரூபாய் அளவுக்கு லஞ்சம் பெற்றுள்ளதாகவும் ரூபா தெரிவித்துள்ளார்.

கடந்த 10ந் தேதி பரப்பன அக்ரஹார சிறையில் நேரில் சென்று தான் ஆய்வு நடத்திய போது இந்த உண்மைகள் தெரிய வந்திருப்பதாகவும் டி.ஐ.ஜி கூறியுள்ளார். எனவே உரிய முறையில் விசாரணை நடத்தி விதிகளை மீறிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக காவல்துறை இயக்குனரை ரூபா கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் ரூபாவின் குற்றச்சாட்டுகளை புகாருக்கு ஆளாகியுள்ள சிறைத்துறை இயக்குனர் சத்தியநாராயணராவ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பணிகளை உரிய முறையில் செய்யாத ரூபாவிடம் தான் விளக்கம் கேட்டதாகவும், அதற்கு பழிக்குப் பழியாக தன் மீது அபாண்ட புகார்களை ரூபா கூறியுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.