கொச்சி,

டிகை பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைதாகி உள்ள நடிகர் திலீப்பின் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டது. அவருக்கு 2 நாள் போலீஸ் காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகையான பாவனா பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் திலீப் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அவருக்கு ஜாமின் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் கொடுக்க நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் போலீசாரின் காவல் விசாரணை மனுவை ஏற்று இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நடிகை பாவனா பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் கார் டிரைவர்  பல்சர் சுனில் கொடுத்துள்ள வாக்குமூலத்தை தொடர்ந்து, மலையாள முன்னணி நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் திலீப் ஜாமீன் கோரி அங்கமாலி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது திலீப் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த மனுவுக்கு எதிர்ப்பு தெரிவித்த காவல்துறை, ‘இந்த வழக்கு தொடர்பான ஆதாரங்களை ஏற்கெனவே திலீப் அழிக்க முயற்சி செய்தார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் ஆதாரங்களை அழிக்க முயற்சிசெய்வார்’ என்றனர்.

இதனால் திலீப்புக்கு ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து, கேரள காவல்துறையினர் திலீப்பிடம்   மூன்று நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி மனு செய்தனர்.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நடிகர் திலீப்பை  இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதையடுத்து விசாரணைக்காக திலீப் அழைத்துச் செல்லப்பட்டார்.

இதற்கிடையில், தலைமறைவாக உள்ள திலீப்பின் மனைவி காவ்யா மாதவனை விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

[youtube-feed feed=1]