
இஸ்லாமாபாத்
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு, இந்தியாவில் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக இந்தியா வர விண்ணப்பித்திருந்த விசா மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஃபைஸா தன்வீர். இவர் வாய்ப்புற்று நோ பாதிக்கப்பட்டு முற்றிய நிலையில் உள்ளவர். அவரும், அவருடைய தாயார் பர்வீன் அக்தர் உடன் இந்தியாவில் உள்ள காஜியாபாத் இந்திரபிரஸ்தா மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெற முடிவெடுத்தார். மற்ற நாடுகளை விட இந்தியாவில் மருத்துவச் செலவு குறைவு என்பதே அவருடைய முடிவுக்கு முக்கிய காரணம் தனது சிகிச்சைக்காக இந்தியா வர இந்திய தூதரகத்துக்கு விண்ணப்பித்திருந்தார். அவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது.
ஃபைஸாவின் தாயார் அக்தர் இது பற்றிக் கூறுகையில், பாகிஸ்தானில் தன் மகளுக்கு சிகிச்சை தர முடியும், ஆனால் அதனால் அவர் கண்கள் பாதிக்கப்படும் எனவும், இந்த விஷயத்தில், இந்திய பாக் அதிகாரிகளோ அல்லது அரசியல் தலைவர்களோ தலையிட்டு தன் மகளுக்கு உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து இந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உதவ முடியும் என பலரும் தெரிவித்ததால் அவருக்கு ஃபைஸா ட்விட்டர் மூலம் வேண்டுதல் விடுத்துள்ளார். அதற்கும் இன்னும் ஏதும் பதில் வரவில்லை.
தன் மகள் உயிர் பிழைக்க வேண்டும் என தாயும், தன் தாய் தனது பிரிவால் துயருறக் கூடாது என மகளும் நினைப்பது மிகவும் சோகமான ஒன்று
[youtube-feed feed=1]