டில்லி,

ந்திய – சீன எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பிரதமர் மவுனமாக இருப்பது ஏன் என ராகுல் காந்தி டுவிட்டரில் வினவியுள்ளார்.

கடந்த சில நாட்களாக சீனா இந்திய எல்லை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து நமது படையினரின் பதுங்கு குழிகளை அழித்ததாக கூறப்பட்டது.

மேலும், இந்தியா-பூட்டான் எல்லை பகுதியில்  சீனா அத்துமீறி நுழைந்து, சிக்கிம் செக்டாரில் சாலை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தை மீறும் செயல்  இரண்டு தரப்புகளும் மாறி மாறி சொல்லி வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில் ஜி-20 மாநாட்டில் கலந்து கொண்டுள்ள மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து உரையாடியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அகில இந்திய காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளார்.

அதில்,  ‘ஏன் சீன விஷயத்தில் நம் பிரதமர் அமைதி காக்கிறார்?’ என்று பதிவிட்டுள்ளார்.

ராகுலின் கேள்விக்கு பாஜ வினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அவர்களுக்கு காங்கிரஸ் சார்பாகவும பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.