மு
ம்பை
விவசாயிகள் கடன் தள்ளுபடி பட்டியலில் 813 விவசாயிகள் மும்பை நகரில் உள்ளதைக் கண்டு மகாராஷ்டிரா முதல்வர் தனது வியப்பை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயிகள் கடனுக்கு தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து ஒரு பட்டியல் சமீபத்தில் அரசால் வெளியிடப்பட்டது. அதில் மும்பையில் நகருக்குள் 694 விவசாயிகளும், புறநகர் பகுதிகளில் 119 விவசாயிகளும் இருப்பது தெரிய வந்தது.
மும்பை நகரம் என்பது வியாபார நகரமாகவே அறியப்பட்டு வந்தது. அங்கும் விவசாயம் நடப்பது வியப்புக்குறிய ஒன்று என முதல்வர் தேவேந்திரா ஃபட்நாவிஸ் கூறியுள்ளார். அவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்வதோடு, அவர்களை ஊக்குவிக்க மேலும் பல திட்டங்களும் அறிவிக்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்.
[youtube-feed feed=1]