
சென்னை,
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை மாற்ற 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
குழுவின் தலைவராக அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தலைமையில் ஆனந்த கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழுவில் வேளாண் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, தியோடர், தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சுப்பிரமணியன் உள்பட 10 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடங்கள் மாற்ற இந்த குழுவினர் ஆய்வு செய்து ஆலோசனைகளை வழங்குவார்கள் என கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel