ரியாத்:
சவுதியில் இருந்து வெளியாகும் அல் ஜகிரா நாளிதழில் கட்டுரையாளராக பணியாற்றி வருபவர் ரமாதன் அல் அன்சி. இவர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார்.

அதில் மன்னர் சல்மானை கடவுளுக்கு இணையாக ஒப்பிட்டு எழுதியிருந்தார். இதை கண்ட மன்னர் இதற்கு கண்டனம் தெரிவித்தார். இதை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக மன்னர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அந்த நாளிதழ் மன்னிப்பு கேட்டு செய்தி பிரசுரித்தது. எனினும் சம்மந்தப்பட்ட கட்டுரையாளர் அன்சியை சஸ்பென்ட் செய்ய வேண்டும் என்று பத்திரிக்கை நிறுவனத்துக்கு மன்னர் தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த பத்திரிக்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ள என்று அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Patrikai.com official YouTube Channel