சென்னை:
பா.ஜ.க. சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வந்தார்.
அதிமுக அம்மா அணியை சேர்ந்த முதல்வர் எடப்பாடி, பழனிச்சாமி, அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியை சேர்ந்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்த ஆதரவு கோரினார்.
புதுச்சேரி முன்னாள் முதல்வர் என்.ஆர். ரங்கசாமியையும் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார். இக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்களை சந்தித்து விட்டு இன்று மாலை சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.