லக்னோ,
நாடு முழுவதும் இன்று நள்ளிரவு முதல் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் பாரதியஜனதா ஆட்சி செய்யும் உ.பி.மாநில அமைச்சர் ஒருவரே ஜிஎஸ்டி என்றால் என்ன என்ற விளக்கம் தெரியாமல் திருதிருவென முழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
உ.பி.யில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த உத்தரப்பிரதேச சமூகநலத்துறை அமைச்சர் ரமாபதி சாஸ்திரியிடம், செய்தியாளர்கள் இன்று நள்ளிரவு அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி குறித்து கேள்வி எழுப்பினர்.
அப்போது செய்தியாளர் ஒருவர் ஜிஎஸ்டி குறித்து விரிவாக்கம் குறித்து கேள்வி எழுப்பினர்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அமைச்சர், ஜிஎஸ்டிக்கு விரிவாக்கம் தெரியாமல் தடுமாறினார்.
ஜிஎஸ்டி என்றால் என்ன என்று தெரியாத ஒருவர், மாநிலத்தின் அமைச்சராக இருக்கிறாரே என்று செய்தியாளர்களும், பொதுமக்கள் நக்கலடித்து வருகின்றனர்.