கடலூர்,

ணல் கொள்ளையில் சம்பாதித்து சினிமா தயாரித்த நடிகர் கைது. மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக நடிகர் சிவமணியை டெல்டா பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள கெடிலம் ஆற்றில் சட்டத்துக்கு புறம்பாக, ஆற்றில் மணல் அள்ளி, மினி குவாரி நடத்தி வந்த நடிகர் சிவமணி கைது செய்யப்பட்டார்.

ஆற்றுக்குள் சட்டவிரோதமாக பல கிலோமீட்டர் தூரத்துக்கு பாதை அமைத்து ஜேசிபி இயந்தி ரத்தின் மூலம் பத்தடிமான ஆழத்துக்கு, 100 கோடி ரூபாய்க்குமேல் மதிப்பிலான மணலை சுரண்டி கொள்ளையடித்ததாக சிவமணி மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

சிவமணி, கடலூர் அருகே உள்ள  ஏரிப்பாளையம் என்ற  கிராமத்தைச்சேர்ந்தவர்.  தற்போது இவர் மணல் கொள்ளை மூலம் சம்பாதித்த பணத்தைக்கொண்டு  “திட்டமிட்டபடி ” என்ற  திரைப்படம் எடுத்து வருகிறார்.

இவர் மீது ஏற்கனவே மண்ணுளி பாம்பு கடத்தியது, மணல் கொள்ளை என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.