ஐதராபாத்
ஈத் தொழுகையின் போது தொழுகை நடத்தியவர்களுக்கு கார்ட்போர்ட் ஷீட்மேல் தொப்பியை வைத்து போலிசார் உதவினர். இந்த வீடியோ வைரலாக மீடியாக்களில் உலா வருகிறது.
ஐதராபாத் நகரில் உள்ள மசூதி ஒன்றில் ஈத் தொழுகையின் போது பாதுகாவலுக்கு அனுப்பப்பட்ட போலிசாரில், வெங்கடேஷ் நாயக், பிரதாப் சிங் ஆகியோரும் அடங்குவர். அந்த மசூதியில் கூட்டம் மிகுதியால் இடமின்றி தெருவிலும் தொழுகைக்கு இஸ்லாமியர்கள் குவிந்தனர். அவர்கள் தாங்கள் தொழுகை நடத்த கார்ட்போர்ட் ஷீட்களை பரப்பி வைத்து அதில் தொழுகை நடத்தினர். அப்போது காற்றில் பறந்த கார்ட்போர்ட் ஷீட்டினால் தொழும் இஸ்லாமியர்கள் துன்பப் படக்கூடாதென்று இந்த இரு போலிசாரும் தங்களது தொப்பியை வைத்து உதவினார்கள்
இந்த நிகழ்வு விடியோ ஷூட் செய்யப்பட்டு போலீசாரின் அவர்களுடைய முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டு பலரும் அதனை பல தளங்களில் ஷேர் செய்தனர். இதுவரை இந்த வீடியோ 50000 தடவைக்குமேல் பார்க்கப்பட்டுள்ளது.
[youtube https://www.youtube.com/watch?v=LCJWKFZXewo]