டில்லி,
ஜனாதிபதி தேர்தலில் பாரதியஜனதா சார்பாக போட்டியிடும் ராம்நாத் கோவிந்துக்கு மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு மனு தாக்கல் செய்துள்ளார்.
அடுத்த மாதம் 17 ம் தேதி நாடு முழுவதும் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற உள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ. கூட்டணியின் வேட்பாளராக பீகார் கவர்னராக ராம்நாத் கோவிந்த் அறிவிக்கப்பட்டு, கடந்த வாரம் மனுதாக்கல் செய்தார்.
இந்நிலையில் ராம்நாத் கோவிந்த்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் முன்னாள் பாராளுமன்ற சபாநயாகர் மீரான குமார் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதற்கிடையில் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,வின் மாற்று வேட்பாளராக மத்திய அமைச்சர் வெங்கைய்ய நாயுடு இன்று மனுதாக்கல் செய்துள்ளார்.
ஏற்கனவே ஜனாதிபதி வேட்பாளராக வெங்கையா அறிவிக்கப்படுவார் என்று செய்திகள் வெளிவந்துள்ள நிலையில், தற்போது மாற்று வேட்பாளராக வெங்கையா நாயுடு மனு தாக்கல் செய்துள்ளார்.
இதன் காரணமாக, துணைஜனாதிபதி பதவிக்கு வெங்கையா தேர்வு செய்யப்படுவார் என்று டில்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன.