குற்றாலம்

குற்றாலம் அருவிப் பகுதியில் மழையின் காரணமாக கடும் வெள்ளம் வருவதால் அருவிகளில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றாலம், மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அனைத்து அருவிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மெயின் அருவியில் வெள்ளம் காரணமாக அங்குள்ள ஆர்ச்சை தொடும் அளவிற்கு தண்ணீர் கொட்டுகிறது.  ஐந்தருவியில் வெள்ளம் காரணமாக ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது.  அங்கு பெண்கள் உடை மாற்றும் அறை, மற்றும் அருகிலுள்ள சில சிலைகள் ஆகியவை கடும் சேதம் அடைந்தன.

எனவே பயணிகள் அருவியில் குளிப்பதற்கு போலிசாரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையொட்டியுள்ள அச்சங்கோவிலை சேர்ந்த கும்பா உருட்டி,  ஆரியங்காவை சேர்ந்த பாலருவி ஆகிய அருவிகளிலும் கடும் வெள்ளம் காரணமாக அருவியில் குளிக்க கேரளா அரசு தடை செய்துள்ளது.