நெட்டிசன்:

கோதண்டராமன் சபாபதி அவர்களது முகநூல் பதிவு:

1857 வேலூர் சிறைச்சாலையில் நடந்த சிப்பாய் கலகம்தான் “முதல் இந்திய சுதந்திரப்போர்” என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

வேலூர்ப்புரட்சி எதற்காக நடந்தது.? வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை முன் வைத்தா.?

இல்லை.

ஆங்கிலப்படையில் வேலை பார்த்த இந்தியக்காவலர்களுக்கு வழங்கப்பட்ட தோட்டாவில் பன்றியின் கொழுப்பும் பசுவின் கொழுப்பும் பூசப்பட்டிருந்தது. அல்லது அப்படி வதந்தி கிளம்பியது.

பசு இப்போதே புனிதம் எனும்போது அன்றைய நாளில் எப்படி போற்றப்பட்டிருக்கும். புனிதப்பசுவின் கொழுப்பு பூசிய தோட்டாக்களை பயன்படுத்த மாட்டோம் என்று சிப்பாய்கள் கிளர்ந்தெழுந்தார்கள்.

வில்லன்களின் மீதான பயம் யாரோ ஒருவர் எதிர்க்கும் வரைதான். எதிர்த்தபின் ஆளாளுக்கு அவனை எதிர்க்கும் துணிவு வந்துவிடும்.

அப்படித்தான் அந்நியர்களை எதிர்க்கவும் முடியும் என்கிற துணிவு வேலூரின் சிப்பாய்கலவரத்தின் மூலம் பரவியது.

சிப்பாய்கலவரத்தின் நோக்கம் புனிதப்பசுவை பற்றியதாக இருக்கலாம். அதுதான் பின்னாளில் சுதந்திர போராட்டமாகி விடுதலையையும் பெற்றுத்தந்தது.

வாஞ்சி நாத ஐயரின் நோக்கம் சட்டைப்பையில் இருந்ததை எப்படி மறுக்க முடியதோ அப்படி சூரியன் தோன்றுவதும் மறைவதும் என் தேசத்திற்குள்தான் என்று இறுமாப்பு கொண்ட பிரிட்டிஷ் பேராதிக்கத்தின் உயர் அதிகாரியான ஆஷ் துரையை சுட்டுக்கொள்வது எத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதும் மறுக்க முடியாது.

பிரிட்டிஷ்னா பயம். அந்த பயத்தை போக்கிய பல போராட்டங்கள் இப்படிப்பட்டவைதான். எல்லாம் சேர்ந்ததுதான் இந்திய விடுதலைப்போர்!”