சென்னை

சென்னை உயர்நீதி மன்றம்  தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும்  மேற்படிப்புக்கான அரசு கோட்டா இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்தில்  இடைக்கால கட்டணமாக ரூ 10 லட்சம் வசூலிக்கும் படி உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் மேனன், மருத்துவ மேற்படிப்புக்கான தனியார் மருத்தவக் கல்லூரிகளின் அரசுக் கோட்டாவில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு கட்டணம் அதிகமாக இருப்பது பற்றியும், அதனை ஒழுங்குப் படுத்தவும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.  அதனால் உயர்நீதிமன்றம் அரசுக் கோட்டாவில் மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தது.

வரும் 20ஆம் தேதி முதல் வகுப்புகள் துவங்க வேண்டும் என்பதால், உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை வழங்கியுள்ளது.   அதன்படி மாணவர்களின் சேர்க்கையை உடனடியாக முடிக்கவும்,  சேர்க்கப்பட்ட மாணவர்கள் இடைக்கால கட்டணமாக ரூ 10 லட்சம் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.  இந்தக் கட்டணம்  மையக் குழுவிடம் செலுத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப் பட்டுள்ளது.   விரைவில் இந்தக் கட்டணம் ஒழுங்குப் படுத்த இந்த குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது/

இதனால் முன்பு திட்டமிட்டபடி தடை ஏதும் இன்றி மருத்துவ மேற்படிப்பு வகுப்புகள் நாளை முதல் துவங்கப்படும்.