டெல்லி:
நாட்டின் வேலைவாய்ப்பு சூழ்நிலையை வரும் 18ம் தேதி பிரதமர் மோடி ஆய்வு மேற்கொள்கிறார்.
modi
கடந்த 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வேலை வாய்ப்பை உருவாக்குவோம் என்பது தான் பாஜக.வின் முக்கிய தேர்தல் பிரச்சாரமாக இருந்தது. ஆனால், தற்போது வரை இது நடைபெறவில்லை. இது ஆளும் பாஜகவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ விபரங்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. இந்த புள்ளி விபரங்கள் சுயவேலை வாய்ப்புக்கும், வேலை வாய்ப்புக்க்கும் உண்டான வேறுபாட்டை அளிக்கிறது.
நிதி ஆயோக் துணைத் தலைவர் அரவிந் பனகரிய கூறுகையில், ‘‘ விரைவில் மோடி அரசின் வேலை வாய்ப்பு உருவாக்குதல் தொடர்பான புள்ளி விபரங்களை வெளியிடவுள்ளார். வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதை நிதிஆயோக் சமீபத்தில் மறுத்திருந்தது. இந்தியா விரைவில் வேலைவாய்ப்பு தொடர்பான புதிய புள்ளி விபர பட்டியலை வெளியிடவுள்ளது. இதன் மூலம் கொள்கை வடிவமைப்பாளர்கள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். சமீப காலமாக வேலைவாய்ப்பு தொடர்பாக வெளியாகும் தகவல்கள், புள்ளி விபரங்கள் சரியான முறையில் இல்லை’’ என்றார்.
தொடர்ந்து அவர் மேலும் கூறுகையில், ‘‘இது தொடர்பாக நீண்ட ஆய்வு தேவை என மத்திய அரச எண்ணுகிறது. இ.பி.ஃஎப்.ஒ மற்றும் இஎஸ்ஐ புள்ளி விபரங்களின் அடிப்படையில் இதை திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
உணவு பதப்படுத்துதல், எலக்ட்ரானிக், தோல், ஜவுளி உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பை அதிகரிக்க நிதிஆயோக் திட்டமிட்டு ஆக்கப்பூர்வ பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு ஏற்ப சிறப்பு பொருளாதார மண்டல்களை உருவாக்கி உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களை கவர்ந்து வேலை வாய்ப்பை அதிகரிக்க நிதிஆயோக் திட்டமிட்டுள்ளது.