சென்னை:

குறுவை சாகுபடிக்காக இந்த ஆண்டும் மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயம் நலிவடைந்துள்ளது. காவிரியில் தண்ணீர் தர கர்நாடகம் மறுத்துள்ளதால் டெல்டா விவாசயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக இந்த மாதம் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், பருவை பொய்த்துபோனதால், கடந்த சில ஆண்டுகளாக தண்ணீர் திறக்க முடியா சூழல் நிலவி வருகிறது.

தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெறும் 23 அணியாக மட்டுமே உள்ளது. 90 அடிக்கு மேல் இருந்தால் மட்டுமே விவசாய சாகுபடிக்கு தண்ணீர் திறக்க முடியும். தண்ணீர் பற்றாக்குறை காரணமாக இந்த ஆண்டு  தண்ணீர் திறக்க முடியாத சூழல் உள்ளது.

இதன் காரணமாக,  டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ரூ.56.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

3.16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டும் மேட்டூர் அணை திறக்கப்படாததல், விவசாயிகளின் நலன் கருதி மேற்கண்ட நிதி ஒதுக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார்.

மேலும், மேட்டுர் மற்றும் மாவட்டங்களுக்கு இந்த ஆண்டும் 12 மணி நேர இலவச மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்றும்

நடப்பாண்டு குறுவை தொகுப்பு திட்டம் ரூ.56.92 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

மேலும் நடவு எந்திரங்களுக்காக ஏக்கருக்கு ரூ.4,000 வழங்கப்படும் என்றும், உயிர் உரங்களுக்காக ஏக்கருக்கு ரூ.520 வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.1,200 என 100 சதவீதம் மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பயறு வகை பயறுகளின் சாகுபடியை ஊக்கப்படுத்த விதைகளுக்கு ஏக்கருக்கு ரூ.960 வீதம் வழங்கப்படும் என்றும், பயிருக்கு  மாற்றாக பயறு வகை பயிர்கள் 1.32 லட்சம் ஏக்கரில் பயிரிட திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

டெல்டா மாவட்டங்களில் நடைபெற வேண்டிய குறுவை சாகுபடி குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆய்வு கூட்டத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளளது.