சென்னை:
சென்னை தி.நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் ஜவுளிக்கடை கடந்த சில தினங்களுக்கு தீ விபத்தில் சிக்கி முற்றிலும் சீரழிந்தது. 4 மாடிகளும், முகப்பு பகுதிகளும் இடிந்து விழுந்தது. இதனால் கட்டடத்தின் ஸ்திரத்தன்மை மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கட்டடத்தை இடிப்பதற்கான பணிகள் தொடங்கின. ராட்சத இயந்திரமான ஜா கட்டர் வரவழைக்கப்பட்டு, கட்டடத்தை இடிக்கும் பணிகள் 9ஆவது நாளாக இன்று நடைபெற்றது. இந்த நிலையில், பிற்பகல் 3.45 மணியளவில், கட்டட இடிப்பு பணியின்போது, இடிபாடுகள் சரிந்து ஜா கட்டர் இயந்திரத்தின் மீது திடீரென விழுந்தது.
இந்த விபத்தில், ஜா கட்டர் மெஷின் ஆப்ரேட்டர் ஊத்தங்கரையைச் சேர்ந்த தொழிலாளி சரத்குமார்(வயது 21) உயிரிழந்தார். இந்நிலையில் பலியான தொழிலாளி சரத்குமாரின் குடும்பத்துக்கு சென்னை சில்க்ஸ் நிர்வாகம் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது.
[youtube-feed feed=1]