திண்டுக்கல்:
கட்சிப் பணியாற்ற டி.டி.வி. தினகரனுக்கு முழு உரிமை உண்டு என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு உதவியாக தங்கும் நபர்களுக்கான அறைகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. இதை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி : தேர்தல் சின்னம் பெற லஞ்சம் கொடுத்த வழக்கில் ஜாமீனில் விடுதலையாகி உள்ள டி.டி.வி தினகரன் தான் மீண்டும் கட்சிப் பணியில் ஈடுபடப் போவதாக தெரிவித்துள்ளாரே?
பதில் : அவர் சொல்வதப 100 சதவீதம் சரியே. கட்சிப்பணி ஆற்ற அவருக்கு முழு உரிமை உண்டு. அவரை நாங்கள் கட்சியில் இருந்து நீக்கவில்லை. அவராகத்தானஅ கட்சியில் இருந்து விலகி கொண்டார். அவரை கட்சியில் இருந்து நீக்கும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கு மட்டுமே இருக்கிறது.
கேள்வி : தினகரனை நாங்கள் யாரும் பார்க்கவோ, வரவேற்கவோ செல்ல மாட்டோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளாரே?
பதில் : அது அவரது சொந்த கருத்து. கட்சியின் கருத்தல்ல.
– இவ்வாறு திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.