
சென்னை,
ஓட்டல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ஓட்டல்களும் மூடப்பட்டுள்ளன.
ஜூலை 1 முதல் மத்திய அரசு அமல்படுத்த இருக்கும் ஜிஎஸ்டி வரிக்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இன்று நாடு முழுவதும் மருந்து கடைகள் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஓட்டல் வணிகர்களும் இன்று கடை அடைப்பு போராட்டம் நடத்துகின்றனர்.
இந்த போராட்டத்தில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, புதுச்சேரி ஆகிய தென் மாநிலங்கள் முழுவதும் இன்று ஒரு நாள் ஒட்டல்களை அடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
Patrikai.com official YouTube Channel