நெட்டிசன்
ஜி.கே. முரளிதரன் (G.k. Murali Dharan ) அவர்களின் முகநூல் பதிவு:
இந்த படத்தை பார்த்தவுடன் யாருக்கு புரியாது? கார் எண்ணான.. BR என்ற வார்த்தை யாரை குறிப்பது? இந்த 1956 வருடம் யார் இறந்த வருடம்?
மிக சிறு குழந்தைக்கும் புரியும் இந்த குறியீட்டை டைரக்டர் மிக தந்திரமாக வைத்திருக்கின்றா ராமாம்.
இதற்கு ஏன் காலா, கையா என பெயர் வைக்க வேண்டும் , நேரடியாக கபாலி II என சொல்லிவிட்டு சென்றால் என்ன?
இதுவும் அந்த வகை படமே, ரஜினி இப்படி மாட்டிகொள்பவர் அல்ல, ரஜினியின் ஸ்பெஷா லிட்டியே ஜாதியினை கடந்தவர் என்பது,
அதனை ரஜினி தகர்த்து தன் தலையிலே மண் அள்ளிபோட்டுகொண்டிருக்கின்றார், இந்த கணக்குகள் எல்லாம் மகா தவறாகும், பெரும் பிழையாகும், ஒரு அடையாளத்தில் அவர் சிக்கிகொள்வது சரியல்ல
என்ன நேரமோ வகையாக சிக்கி கொண்டார்
ரஞ்சித் கபாலியில் குத்தி குதறிய மிச்ச மீதியினை இப்படம் முடித்தே விடும், உறுதியாக சொல்லலாம்,
இனி ரஜினியினை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
(இனி ரஜினி ஈழம் சென்றால் திருமா அனுமார் போல தூக்கி செல்லவே வாய்ப்பு இருக்கின்றது)