சென்னை:
இன்று தனது ரசிகர்களிடையே பேசிய ரஜினி, நாட்டில் ஜனநாயக சிஸ்டம் சரியில்லை என்று பேசி அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளார்.
கடந்த 5 நாட்களாக ரஜினி தனது ரசிகர்களை சந்தித்து பேசி வருகிறார். முதல்நாளில் ரசிகர்கள் மத்தியில் பேசிய அவர், கடைசி நாளான இன்றும் ரசிகர்களிடம் பேசினார். இன்று அவருடன் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்கர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர்.
கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்று வரும் ரசிகர்களுடனான சந்திப்பில் இன்று பேசிய ரஜினி பஞ்ச் டயலாக் பேசினார்.
அவரது இன்றைய பேச்சு தமிழக அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் இன்றைய அரசியலில் நிர்வாகம் சீர்கெட்டுள்ளது. ஜனநாயக சிஸ்டம் சரியில்லை. இது மொத்தத்தையும் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் உருப்படும். அதற்கான நேரம் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினார்.
மேலுரும், நம்மை பற்றி நிறைய பேசியிருக்கிறார்கள். அவதூறு எல்லாம் உரம்தான். அதை நம்முடைய வளர்ச்சிக்கானதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போதான் நாம வளரமுடியும். ஒரு செடி வளர நிறைய செய்ய வேண்டும் அதுபோலதான் அரசியலும்.
அரசியலில் எனக்கு நல்ல நண்பர்கள் உள்ளனர். மு.க ஸ்டாலின் எனக்கு நல்ல நண்பர், சிறந்த நிர்வாகி. பாமக அன்புமணி நல்ல மனிதர். திருமாவளவன் இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர். சீமான் சிறந்த போராளி.
தமிழகத்தில் சிஸ்டத்தை மாற்றனும். சிஸ்டத்தை மாற்றினால்தான் தமிழகம் உருப்படும் என்று பேசி ரஜினிகாந்த் பேசியுள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.