ந்த ஆண்டு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

பொதுவாக தமிழகம் மற்றும் கேரளாவில் ஜூன் முதலில் தொடங்குவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு  ஜூன் 8ம் தேதிதான் தான் தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு ஒருசில நாட்கள் முன்னதாகவே தொடங்கும் என மத்திய வானிலை மையம் அறிவித்து உள்ளது.

தென்மேற்கு பருவக்காலம் கேரளாவை வைத்துதான் முடிவு செய்யப்படுகிறது.  பொதுவாக ஜூன் மாதத்தில் தெற்கே உள்ள தீவு முதல்  மற்றும் கிழக்கு கரையோர மாநிலங்கள் மழைக்காலத்தை உள்ளடக்கியுள்ளன.

அந்தமானில் ஏற்கனவே 6 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்குப் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்னும் சில நாட்களில் அது வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள்  அடுத்த 72 மணி நேரங்களில்  மேலும் முன்னேற்றம் ஏற்படலாம் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில் வழக்கத்தை விட அதிகமான மழையை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம் என்று வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கேரளத்தில் இப்பருவத்தின் முதல் மழை இம்மாத இறுதியில் பொழியும் என வானிலை மையம் கணித்துள்ளது.

பருவ மழைக்காலம் பற்றி புனே வானிலை மைய இயக்குநர் டிஎஸ்.பாய், அடுத்த சில வாரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதையே தொடக்கத்தில் மழை பெய்துள்ளது காட்டுகிறது என்று கூறியுள்ளார்.

 

தனியார் வானிலை முன்னறிவிப்பாளரான ஸ்கைமெட் கூற்றுப்படி, மே 29ம் தேதி கேரளாவில் பருவமழை தொடங்கம் என்று கூறியுள்ளார்.