சென்னை:

சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த கரண் சின்ஹா பணியிட மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக ஏ.கே.விஸ்வநாதன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர துணை கமிஷனராக சாம்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பொக்குவரத்துக் கழக தலைமை லஞ்ச ஒழிப்பு அதிகாரியாக ஜெயஸ்ரீ நியமனம் செய்யப்பட்டுள்ளர். மதுரை போக்குவரத்து காவல் துணை கமிஷனராக மணிவண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

காவல் தலைமை அலுவலக துணை கமிஷனராக சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக ஜெயகவுரி, ஊர்க்காவல் படை ஏடிஜிபியாக சுனில்குமார் சிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காவல் தலைமை அலுவலக ஏடிஜிபியாக எம்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வகையில் தமிழகத்தில் 17 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.