
சென்னை.
தமிழ்நாட்டில் 1663 ஆசிரியர்கள் பணியிடங்கள் தேர்வுக்கான விண்ணப்பம் விநியோகம் இன்று தொடங்கியது.
தமிழ்நாடு டீச்சர்ஸ் ரெக்ருட்மென்ட் போர்டு இதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
இதன்படி முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர்கள் பணிக்கான தேர்வு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் உள்ள 1,663 பணியிடங்களுக்கான ஆசிரியர் பணி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது.
www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மே 30-ம் தேதி கடைசி நாளாகும்.
ஆசிரியர் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு ஜூலை 2-ம் தேதி நடைபெறுகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel