சென்னை:

றைந்த முதல்வர் ஜெயலலிதா எழுதி வைத்த உயில் தன்னிடம் உள்ளதாக அவரது அண்ணன் மகன் தீபக் தெரிவித்துள்ளார்.

தமிழக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் இல்லம்,  கோடநாடு எஸ்டேட், ஐதராபாத் திராட்சைத் தோட்டம் உட்பட ஏராளமான சொத்துக்கள் உள்ளன. கடந்த வருடம் டிசம்பர் 5ம் தேதி ஜெயலலிதா மறைந்தபிறகு, அச் சொத்துக்கள் யாருக்குச் சொந்தம் என்ற கேள்வி எழுந்தது.

தீபக் – ஜெயலலிதா

இது குறித்து ஜெயலலிதாவுடனேயே போயஸ் இல்லத்தில் வாழ்ந்துவந்த வி.கே. சசிகலா உட்பட  எவரும் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.

இந்த நிலையில்,  ஜெயலலிதாவின் அண்னண் ஜெயக்குமாரின் மகன் தீபக், தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, ஜெயலலிதா உயில் குறித்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

“என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன.

அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள வீடு, கோடநாடு எஸ்டேட், ஐதராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்குத்தான் சொந்தம்” என்று தீபக் தெரிவித்தார்.

இதுவரை ஜெயலலிதா உயில் குறித்து எவரும் பேசாத நிலையில் தீபக் இவ்வாறு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.