சென்னை,
ரெய்டு அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவை விசாரணைக்கு ஆஜராகுமாறு வருமானவரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
இன்று பிற்பகல் ஆஜராகும்படி சம்மனில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணம் விளையாடியதை தொடர்ந்து கடந்த மாதம் 7ந்தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் கீதா லட்சுமி, நடிகர் சரத்குமார், முன்னாள் எம்.பி., சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் விஜயபாஸ்கரின் குவாரிகள், உறவினர் வீடுகளில் சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி ரம்யாவுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.
அதில், இன்று பிற்பகல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தமிழக அமைச்சர்கள் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.