திருவனந்தபுரம்,

கேரளாவில் முதன்முறையாக திருநங்கையருக்கான தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

மூன்றாம் பாலினமான திருநங்கையர் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் தங்களுக்கான உரிமைகளையும் சமூகத்தில் தமக்கான இடத்தையும் பெற்று வருகின்றனர்.

இதன் ஒரு அடையாளமாக கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் திருநங்கை யருக்காக நடத்தப்பட்ட தடகளப் போட்டிகள் பார்வையாளர்களின் அமோக வரவேற்பை பெற்றது.

கேரள அரசே இந்த நிகழ்ச்சிக்கு ஏறபாடு செய்திருந்தது. இந்த ஒருநாள் தடகளப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

ஒவ்வொருவரும் மூன்று போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 132 திருநங்கையர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.