சென்னை,

மிழகத்தில் விவசாயிகள் தற்கொலையே நடைபெறவில்லை என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது விவசாயிகளிடேயே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு பொதுநல வழக்காடு மையம், தமிழ்நாட்டில் வறட்சி காரணமாக விவசாயிகள் மரணம் தொடர்கிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது, விவசாயிகள் பிரச்சினையில் அக்கறை காட்டாத தமிழக அரசை கடுமையாக சாடினார்.  தமிழக அரசு மெத்தன போக்கை கடைப்பிடிக்கக் கூடாது; மாநில அரசு அமைதி காப்பது சரியான அணுகுமுறை அல்ல. விவசாயிகளின் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்

விவசாயிகள் தற்கொலை தடுப்பு நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும், என்று  உத்தரவிட்டனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தமிழக அரசு சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், தமிழகத்தில் கடந்த ஆண்டு 82 விவசாயிகள் மட்டுமே தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என்று கூறி உள்ளது. 

ஆனால், இவர்களில் யாரும் வறட்சி காரணமாக தற்கொலை செய்யவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவலை கூறி உள்ளது.

இறந்த விவசாயிகளில் 30 பேர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ள தாகவும், மீதமுள்ள 52 விவசாயிகள் வயது முதிர்வு மற்றும் நோய்வாய் பட்டும் இறந்துள்ளனர் என்று தெரிவித்து உள்ளது.

தமிழக அரசின் இந்த தகவல் தமிழக அரசியல் கட்சியினர் மட்டுமின்றி விவசாயிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 50 நாட்களுக்கும் மேலாக தலைநகர் டில்லியில் போராடி வந்த விவசாயிகளின் போராட்டத்தை கேலிக்கூத்தாக்கி உள்ளது.