ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை தூக்கியுள்ளது. மாநிலத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.
போராட்டம் தொடர்பான புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், தகவல்கள் சமூக வளை தளங்கள் மூலம் அதிக அளவில் பரப்பப்பட்டு வருகிறது. இதில் ராணுவத்தின் மனித உரிமை மீறல் தொடர்பான தகவல்களும் அதிகம் பகிரப்படுகிறது. போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் மாநில அரசு திணறி வருகிறது.
கடந்த 17ம் தேதி முதல் இந்த போராட்டம் நீடித்து வருகிறது. போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே மோதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் மெகபூபா அரசை கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஒரு மாத காலத்திற்கு பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலை தளங்களை அரசு முடக்கியுள்ளது. 3ஜி மற்றும் 4ஜி இணைய சேவையில் இந்த தடை உத்தரவை உள்துறை அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது. பிராட் பேண்ட் வேகமும் 2ஜி.யாக குறை க்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப், பேஸ்புக், டுவிட்டர், க்யூ க்யூ, வீ சாட், ஓசோன், டம்ப்ள்ர், கூகுல் பிளஸ், பாய்டு, ஸ்கைப், வைபர், லைன், ஸ்னாப் சால், பின்டரஸ்ட், டெலிகிராம், ஸ்னாப் பிஷ், யு டியூப் (அப்லாடு), வைன், பஸ்நெட், சங்கா, பிளிக்கள் உள்ளிட்ட 22 சமூக வளைதளங்கள் முடக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உள்துறை அனுப்பியுள்ள உத்தரவில், ‘‘ மொத்தமாக தகவல்களை ஒரு நபருக்கோ, அ ந்நது பல நபருக்கோ தகவல்கள் அனுப்புவதை தடுக்க வேண்டும். காஷ்மீர் பகுதியில் ஒரு மாத காலத்திற்கோ அல்லது மறு உத்தரவு வரும் வரை இதை அமல்படுத்த வேண்டும்.
சமூக வளைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அமைதிக்கும் குந்தகம் ஏற்படும் வகையிலான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. தேச விரோத சக்திகள் உறுதி செய்யப்படாத தகவல்கள், புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இது பொது மக்களுக்கும், பொதுச் சொத்துக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தடை உத்தரவு தொடர்பாக வழக்குகள் தொடரப்பட்டதால் மத்திய அரசின் கருத்தை கேட் டுகும் வகையில் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்றத்தில் உள்துறை சார்பில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.