ஆப்கானிஸ்தானின் வடக்கு நகரான மசார் ஐ -ஷெரீப் நகருக்கு அருகே உள்ள ராணுவத் தளத்தை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 140 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கான் ராணுவத்தினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது. இஸ்லாத்திற்காக போராடுகிறோம் என்று கூறிக் கொள்ளும் தலிபான் மத வெறியர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த 140 பேரை கொலை செய்துள்ளனர்.
கொலை செய்தவர்களும் அல்லாகு அக்பர் (அல்லாவே பெரியவன்) என்று கத்தியிருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களும் அல்லாகு அக்பர் (அல்லாவே பெரியவன்) என்று கத்தியிருக்கிறார்கள். இரண்டு தரப்பும் ஒரே கடவுளை கூப்பிட்டுக் கொண்டே கொலையை நடத்தியதாக செய்திகள் கூறுகின்றன.
அப்கான் ராணுவ வீரர்களின் உடையை அணிந்து தலிபான்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த தாக்குதலில் 10 தலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டதாக அப்கானிஸ்தானின் பாதுகாப்பு அமைச்க செய்தி தொடர்பாளர் தவ்லத்வாசிரி தெரிவித்துள்ளார்.
ராணுவத்தினர் நடத்திய பதில் தாக்குதலில் 7 தலிபான்கள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் உயிருடன் பிடிபட்டுள்ளதாகவும் மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டதாகவும் அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.