டில்லி:
பயிர்க்கடனை தள்ளுபடி செய்யக்கோரி தமிழக விவசாயிகள் இன்று 31 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைநகர் ஜந்தர்மந்திரில் நடைபெற்று வரும் தமிழக விவசாயிகளின் போராட்டம் இன்று 31வது நாளை எட்டியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், நதிநீர் இணைக்க வேண்டும், விவசாயி களுக்கு பென்சன் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் போராட்டம் இன்று 31வது நாளை எட்டியுள்ளது.
பல வகையான நூதன போராட்டங்கள் நடத்தியும் மத்திய அரசும், பிரதமர் மோடியும் போராடும் விவசாயிகளை கண்டுகொள்ளதா நிலையில் இன்று 31 வது நாளாக குட்டிகரணம் அடித்து போராடி வருகின்றனர்.