
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு தரப்போவதாக பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணித் தலைவர் ஒருவர் அறிவித்திருப்பது அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
மேற்குவங்க மாநிலம், பிர்பும் மாவட்டத்தில், ஹனுமன் ஜெயந்தியையொட்டி நடத்தப்பட்ட பேரணியை தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர், இதற்கு கண்டனம் தெரிவித்து பேசிய யோகேஷ் வர்ஸ்னே, மம்தாவின் தலையை வெட்டிக் கொண்டு வருபவருக்கு 11 லட்சம் ரூபாய் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மம்தா பானர்ஜி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாகவே செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Patrikai.com official YouTube Channel