இஸ்லாமாபாத்,
உளவாளியாக பணியாற்றியதாக குற்றம் சாட்டி இந்தியாவைச் சேர்ந்த குல்பூஷன் ஜாதவுக்கு பாகிஸ்தான் மரண தண்டனை விதித்துள்ளது.
இவ்விவகாரத்தில் கடும் எதிர்விளைவை சந்திக்க வேண்டியது இருக்கும் என இந்தியா பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கையை விடுத்து உள்ளது.
மக்களவையில் இன்று பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எப்பாடுபட்டாவது ஜாதவ் இந்தியா கொண்டு வரப்படுவார் என உறுதியளித்திருக்கிறார். இச்சம்பவம் இருநாடுகளுக்கும் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் அரசின் வானொலி செய்தியில், எந்த ஒரு அச்சுறுத்தலுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் தயார்நிலையில் இருப்பதாக நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நாட்டின் ராணுவப்படையின் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக நவாஸ் செரீப் தெரிவித்துள்ளதாகவும் வானொலி நிலைய செய்தியில் கூறப்பட்டுள்ளது.