
சென்னை,
டில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்ட தமிழ்நாடு இளைஞர்கள் விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும், கடன் தள்ளுபடி, உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி ஜந்தர்மந்திரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்தப்போராட்டத்தை ஆதரித்து சென்னையில் விவசாயிகள் இளைஞர்கள் சங்கத்தினர் இன்று போராட்டக்களத்தில் குதித்தனர். விவசாயிகளின் பிரச்னையில் ஆளுநர் தலையிட கோரி சின்னமலை பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்த இளைஞர்கர்கள் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.
பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Patrikai.com official YouTube Channel